Don Bosco Anbu Illam Coimbatore
Your contribution can give hope, safety, and opportunity to a child in need....
10.09.2026 உலக தற்கொலை தடுப்பு தினம்
உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியானது 24.09.206 இன்று காலை 10.30 மணியளவில் கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
கோவை தொன்போஸ்கோ அன்பு இல்ல இயக்குனர் தந்தை அர்னால்டுக்கு மகேஷ் தலைமை தங்கினார்கள்.
அருட் தந்தை செல்வராஜ் அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப்பேசினார்கள்.
கோவை அவினாசிலிங்கம் கல்லூரி சமூகப்பணி படிக்கும் மாணவிகள் கலந்து கொண்டு தற்கொலை தடுக்கப்பட வேண்டும் என்ற தலைப்பில் வீதி நாடகம் நடத்தினார்கள். மேலும் அவினாசிலிங்கம் கல்லூரி சமூகப்பணி துறையின் உதவி பேராசிரியை திருமதி டாக்டர் .கோகிலா அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கோவை துடியலூர் ஆனந்தம் Mind care Fountation மனநல மருத்துவர் திருமதி ஹெலெனா ஜெயக்கொடி அவர்கள் கலந்துகொண்டு தற்கொலை எண்ணத்தை கை விடுவது எப்படி என்ற தலைப்பில் உரையாடினார்கள்.
கோவை உக்கடம் காவல்நிலைய ஆய்வாளர் திருமதி. கோமதி அவர்கள் தற்கொலைத்தடுப்பு பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தார்கள்.
தற்கொலை தடுப்பு உறுதிமொழியை அன்பு இல்ல பணியாளர் திரு.எட்வர்ட் பாஸ்கர் அவர்கள் வழிநடத்தினார்.
தொன்போஸ்கோ அன்புஇல்ல இயக்குனர் தந்தை அர்னால்டுக்கு மகேஷ் தற்கொலை தீர்வு அல்ல என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு உரையை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அன்பு இல்ல உடன் உழைப்பாளர்கள் ,அன்பு இல்ல பணியாளர்கள், சமூகப்பணி பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்தநிகழ்ச்சியை அன்பு இல்ல பணியாளர் திருமதி.ஜாக்குலின் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
இறுதியாக அன்பு இல்ல பணியாளர் திரு பாலமுருகன் நன்றியுரை வழங்கினார்.
இந்தநிகழ்ச்சியை குழந்தைகள், இளைஞர்கள், பொதுமக்கள் என சுமார் 500 பேர் விழிப்புணர்வு அடைந்துள்ளனர்.